Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 110)

Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி

பாதாவநி ப்ரபுதராந் அபராதவர்க்காந் ஸோடும் க்ஷமா த்வம் அஸி மூர்த்திமதீ க்ஷமைவ யத் த்வாம் விஹாய நிஹதா: பரிபந்தி நஸ்தே தேவேந தாசரதி நா தசகண்டமுக்யா:

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பவளே! அனைத்துக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு சரீரம் பெற்றவளாக, பொறுமையே வடிவமாக நீ உள்ளாய். ஆகையால்தான் இராமன் உன்னைப் பரதனிடம் அளித்து விட்டு, இராவணன் போன்றவர்களை அழித்தான் போலும்.

பாதுகைக்குப் பொறுமை அதிகம் என்பதால், எப்படிப்பட்ட குற்றத்தையும் மன்னித்துவிடுவாள் என்று இராமன் அறிந்திருந்தான்.ஆகையால், தன்னுடன் அவள் இருந்தால் இராவணன் போன்றோரையும் மன்னித்துவிடுவாள் என்பதால், பரதனுடன் அனுப்பிவிட்டான். அதன் பின்னரே அவனால் இராவணனை அழிக்க இயன்றது என்று கருத்து.