Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 109)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
மந்யே நியுஜ்ய பவதீம் மணிபாதரஷே பார்ஷ்ணிக்ரஹஸ்ய பரதஸ்ய நிவாரணார்த்தம் ரத்னாகரம் ஸபதி கோஷ்பதயந் விஜிக்யே ராம: க்ஷணேந ரஜநீசர ராஜதாநீம்
உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கடலைக் கலக்கியபடி சென்று அரக்கர்கள் வாழ்ந்து வந்த இலங்கைக்குச்செல்வதற்காக எழுந்தான். அப்போது பரதன் இராமனின் கால்களைப் பற்றியபடி இருந்தான். அவனைத் திசை திருப்புவதற்காக உன்னை அளித்தான் போலும்.
அழும் குழந்தையைச் சமாதானம் செய்து, அதன் கவனத்தைத் திசை திருப்ப எண்ணும் தாயானவள், அதன் கைகளில் விளையாட்டுப் பொருள்களைக் கொடுப்பது வழக்கம் அல்லவா? இது போன்று இங்கு இராமனின் செய்கை இருந்ததாகக் கூறுகிறார். பரதன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் தனது அவதார நோக்கம் நிறைவேறாது என்று இராமன் எண்ணி, இவ்விதமாகச் செய்தான்.