Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 108)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
பாதாவநி ப்ரபவத: ஜகதாம் த்ரயாணம் ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத் நோ சேத் கதந்நு பரதஸ்ய தம் ஏவ லிப்ஸோ: பரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மூன்று உலகங்களுக்கும் தலைவனாக உள்ள இராமனைக் காட்டிலும் உன்னுடைய மேன்மைகள் நிச்சயம் அதிகமாகவே இருக்கவேண்டும் எப்படி? இவ்விதம் இல்லை என்றால் இராமனையே அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பரதன், இராமனுக்குப் பதிலாக உன்னை ஏற்றுக் கொள்ளும்படியாக, அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அடகுப் பொருளாக நீ எப்படி ஆக முடியும்?
அடகு வைக்கப்படும் பொருளானது, அதன் மீது வழங்கப்படும் கடன் தொகையைக் காட்டிலும் அதிக மதிப்பு உள்ளதாக இருந்தால் மட்டுமே கடன் வழங்குவார்கள் அன்றோ? ஆக இராமனை வேண்டி நின்ற பரதனுக்கு, பாதுகை கிட்டியவுடன் அவன் த்ருப்தி அடைந்தான் என்றால், இராமனைக் காட்டிலும் பாதுகைக்கு மதிப்பு உள்ளது என்றுதானே ஆகிறது? இவ்விதம் இல்லை என்றால், இராமனுக்குப் பதிலாகப் பாதுகையை அடகுப் பொருள் போன்று பரதன் எப்படி ஏற்பான்?