Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 107)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
ராமே வனம் வ்ரஜேதி பங்க்திரதே ப்ரஸுப்தே ராஜ்யாபவதா சகிதே பரதே ததாநீம் ஆச்வாஸயேத் க இவ கோஸலவாஸிந: தாந் ஸீதேவ சேத் த்வம் அபி ஸாஹஸவிருத்தி: ஆஸி:
இராமன் கானகம் சென்று விட்டான்; தசரதர் இதன் காரணமாக இறந்து விட்டார். இப்படிப்பட்ட நேரத்தில் பரதன் நாட்டைஆளும் பட்டத்தை ஏற்றான் என்று பலர் ஏசக்கூடும். அந்த நேரத்தில் சீதை போன்று நீயும் இராமனுடன் காட்டில் வசித்தால், கோசல நாட்டில் உள்ள மக்களுக்கு யார் ஆதரவு கூற இயலும்? இதனால் நீ மட்டும் வந்தாய் போலும்.
இராமனின் பிரிவுத்துன்பம் காரணமாக தசரதன் மறைந்தார். அந்த நேரத்தில் பரதன் பட்டாபிஷேகம் செய்துகொண்டால், பலரும் அவனை ஏசக்கூடும். அந்தப் பழியானது பாதுகையால் மட்டுமே நீங்கும். மேலும் இராமனுடன் சீதையும் சென்றுவிட்டாள். இந்த நேரத்தில் அயோத்தியின் மக்களுக்கு ஆறுதல் யார் உள்ளனர்? இதனை உணர்ந்த பாதுகை மீண்டும் திரும்பியது போலும்.