Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 106)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
பக்த்யா பரம் பவது தத் பரதஸ்ய ஸாதோ: த்வத் ப்ரார்த்தநம் ரகுபதௌ மணிபாதரக்ஷே கேந அசயேந ஸ முநி: பரமார்த்த தர்சீ பத்ராய தேவி ஜகதாம் பவதீம் அவாதீத்
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பவளே! இராமனிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்த பரதன், அந்தக் காரணத்தால் மட்டுமே உன்னை ஆராதித்தான் என்று கூற இயலாது. உண்மையை நன்கு அறிந்த வசிஷ்ட மகரிஷி , நீ உலக நன்மைகளை அளிப்பவள் என்று கூறினார் அல்லவோ? வெறும் பக்தி காரணமாக பரதன் உன்னை ஆராத்தித்தான் என்றால், வசிஷ்டர் புகழ்ந்தது என்ன காரணத்தினால்?
நம்மிடம் ப்ரியமானவர்களின் பொருள்களை நாம் பாதுகாத்துப் போற்றுவது இயல்பே ஆகும். இதன் மூலம், வெறும் பக்தி, ப்ரியம் காரணமாக மட்டுமே பரதன் பாதுகையைப் போற்றினான் என்று கூற இயலாது. ஏன் என்றால் - வசிஷ்டர் பாதுகையப் போற்றினார் என்பதை நாம் காணலாம். உண்மையான பெருமை பாதுகைக்கு உள்ளதால் அல்லவோ அவர் போற்றியிருக்கக்கூடும்?