Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 105)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
ராமாத்மந: ப்ரதிபதம் மணிபாதரக்ஷே விச்வம்பரஸ்ய வஹநேந பரீக்ஷிதாம் த்வாம் விச்வஸ்ய தேவி வஹநே விநிவேசயிஷ்யந் விஸ்ரப்த ஏவ பரத: பவதீம் யயாசே
உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகத்தை இராமனாகிய பெரியபெருமாள் தூக்கி ஆதரித்தபடி உள்ளான். பாதுகையாகிய நீ அவன் நடக்கும்போது அவனைத் தூக்கியபடியே செல்கிறாய். ஆக நீ மறைமுகமாக உலகையும் தூக்குகிறாய் அல்லவா? இத்தனை உயர்த்தி உன்னிடம் உள்ளதால் பரதன் உன் மீது நம்பிக்கை கொண்டு உன்னை வேண்டி நின்றான் போலும்.
சக்ரவர்த்தியாகப் போகிற ஒருவனுக்கு, அதற்கான தகுதி இருக்கவேண்டும் அல்லவா? இந்த உலகையே தாங்கும் இராமனை, பாதுகை தாங்குவதால், பாதுகையின் மீது பரதனுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டானது. அதனால் இராமனிடம் பாதுகையை வேண்டிப் பெற்றான்.