Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 104)

Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி

மத்வா த்ருணாய பரத: மணிபாதரக்ஷே ராமேண தாம் விரஹிதாம் ரகுராஜதாநீம் த்வாம் ஏவ ஸப்ரணயம் உஜ்ஜயிநீம் அவந்தீம் மேநே மஹோதயமயீம் மதுராம் அயோத்யாம்

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமனைப் பிரிந்த பரதன் அயோத்தியை துச்சமாகவே எண்ணினான். ஆனால் இராமனின் பாதுகையான உன்னை - உஜ்ஜயிநி, அவந்தி, மதுரா, அயோத்தி என்று மிகவும் உயர்த்தியான புண்ணிய இடங்களாகவே அறிந்து கொண்டான்.

இராமன் இல்லாத அயோத்தியை பரதன் ஒரு துரும்பாகவே எண்ணினான். ஆனால், பாதுகையை மிகவும் உயர்ந்த, மோக்ஷம் அளிக்கவல்ல ஸ்தலங்களாகவே எண்ணினான்.