Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 102)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீபதீநாம் பௌராந் ச பாதரஸிகாந் ப்ருதிவீம் ச ரக்தாம் த்வாம் ஏவ ஹந்த சரணாவநி ஸம்ப்ரயாஸ்யந் ஆலம்பத ப்ரதமம் உத்தர கோஸலேந்த்ர:
சரணம் என்று அடைபவர்களைக் காக்கும் திருவடிகளைக் காப்பவளே! வடக்கில் உள்ள கோசலை நாட்டின் சக்ரவர்த்தியான இராமன் செய்து என்ன? ரகுவம்சம் என்ற பட்டம், தனது திருவடிகளின் மீது மிகவும் அன்புவைத்த ஜனங்கள், தனது நாடு ஆகியவற்றைத் துறந்து காட்டிற்குச் சென்றான். ஆயினும் அவன் உன்னை விடாமல் அணிந்து கொண்டு போனான். அவனுக்கு உன் மீது அத்தனை ப்ரியம் போலும்.
இராமன் காட்டிற்குச் செல்லும்போது தன்னுடன் தனது படைகள் இல்லை, தனது நாட்டு மக்கள் இல்லை, பரிவாரங்கள் ஏதும் இல்லை என்று உணர்ந்தான். ஆயினும், இவற்றைக் காட்டிலும் மேலான பாதுகைகள் உண்டே என்று எண்ணியபடி, பாதுகையுடன் சென்றான்.