Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 101)

Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி

பஜாம: பாதுகே யாப்யாம் பரதஸ்ய அக்ரஜ: ததா ப்ராய: ப்ரதிப்ரயாணாய ப்ராஸ்தாநிகம் அகல்பயத்

பரதனின் தமையனான இராமன், தான் அயோத்திக்கு மீண்டும் வருவதற்கான ஏற்பாடுகளை, பரதனுக்குத் தனது பாதுகையை அளித்ததன் மூலம் செய்தான். அப்படிப்பட்ட பாதுகைக்கு எங்கள் த்யானம் உரித்தாக வேண்டும்.

ஒருவன் ஊருக்குக் கிளம்பும்போது, அன்று ஏதோ ஒரு காரணத்தினால் புறப்படாமல் இருந்து விடக்கூடும். மீண்டும் ஊருக்குச் செல்ல வேறு நல்ல நாள் கிட்டாமல் போகக்கூடும். ஆகவே அவன் செய்வது - தன்னுடைய முக்கியமான பொருள்களை, தான் முன்பே குறித்திருந்த நாளில், வேறு இடத்தில் வைத்துவிட்டு வந்து விடுவான். பின்னர் வேறு ஒரு நாளில், நாள்-கிழமை ஆராயாமல் புறப்பட்டு விடுவான். இவ்விதம் இராமன் தனக்கு முன்பாக பாதுகையை அயோத்திக்கு மீண்டும் அனுப்பினான் என்றார்.