Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 100)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

மூர்த்நா ஸதாம் அதஸ்தாத் உபரி ச விஷ்ணோ: பதேந ஸங்கடிதாம் அதவீயஸீம் விமுக்தே: பதவீம் அவயந்தி பாதுகே பவதீம்

பாதுகையே! நீ உனது கீழ்ப்பகுதியில் பெரியவர்களின் தலைகளுடன் சேர்க்கப்படுகிறாய். மேற்புறம் நம்பெருமாளின் திருவடிகளுடன் சேர்க்கப்படுகிறாய். இப்படிப்பட்ட உன்னை மோக்ஷத்திற்கு உண்டாகிய மிகவும் எளிய வழியாகவே கொள்கிறார்கள்.

நல்லவர்களின் தலைக்கும் நம்பெருமாளின் திருவடிகளுக்கும் பாதுகையானது பாலமாக உள்ளது. உடலை விட்டு ஜீவன் பிரியும்போது, தலை மூலமாக வெளியேறும் ஜீவன், அர்ச்சிராதி மார்க்கமாக மோக்ஷம் அடைகிறது என்பது பொதுவான கருத்து. இங்கு மோக்ஷம் என்பதைத் திருவடிகள் எனக் கூறுகிறார். ஆக, ஜீவன் தலை வழியாகப் பிரிந்து, மோக்ஷமாகிய நம்பெருமாளின் திருவடிகளை அடைவதற்குப் பாலமாக பாதுகை உள்ளது என்று மறைமுகமாகக் கூறியதாகவும் கொள்ளலாம்.