Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 99)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
மூர்த்நா ததாநாம் மணிபாதுகே த்வாம் உத்தம்ஸிதம் வா புருஷம் பவத்யா வதந்தி கேசித் வயமாமநாம: த்வாம் ஏவ ஸாஷாத் அதிதைவதம் ந:
உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஒரு சிலர் பெரியபெருமாளைச் சுமந்து கொண்டுள்ள உன்னை ஆராதிக்கவேண்டும் என்று கூறுகின்றனர். வேறு சிலர் உன்னை அணிந்துள்ள பெரியபெருமாளை ஆராதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் நாங்கள் உன்னையே அனைத்துப் பலன்களும் அளிக்க வல்லவளாக ஏற்கிறோம்.
பாதுகை என்பது ஆசார்யனுக்குச் சமானம் என்பது பொதுவான கருத்து. இங்கு ஆசார்யனுக்கு முக்யத்வமா அல்லது பெரியபெருமாளுக்கு முக்யத்வமா என்னும் சந்தேகம் எழுகிறது. இதற்குத் தெளிவான விடையை மதுரகவியாழ்வார் - தேவு மற்று அறியேன் - என்று முன்பே கூறியுள்ளார். இதனை அடியொட்டி ஸ்வாமி தேசிகனும் தான் பாதுகையையே ஏற்பதாகக் கூறுகிறார்.