Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 98)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
அப்யாஸ யோகேந நிக்ருஹ்யமாணை: அந்தர்முகை: ஆத்மவித: மநோபி: மாத: த்வயா குப்த பதம் ப்ரபாவாத் அந்வேஷயந்தி ஆகமிகம் நிதாநம்
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஆத்மாவைக் குறித்த ஞானம் உள்ளவர்கள், அன்றாடம் செய்யப்பட்ட த்யானம் மூலம் நன்கு வசப்படுத்தப்பட்ட மனம் கொண்டு ஜீவ-பரமாத்மாவையே த்யானித்தபடி உள்ளானர். இதன் மூலம் - உனது சக்தியால் மட்டுமே காப்பாற்றப்படும் திருவடிகளைக் கொண்டவனும், வேதங்களில் கூறப்பட்டுள்ள புதையல் போன்றும் உள்ள பெரியபெருமாளைத் த்யானிக்கின்றனர்.
ஆத்மாவின் ஸ்வரூபம் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் பாதுகையைத் தங்கள் சிந்தையில் வைத்து எப்போதும் த்யானித்தபடி உள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் சிந்தனையில், அந்தப் பாதுகையால் காப்பாற்றப்படும் திருவடிகளைக் கொண்ட பெரியபெருமாள் தானாகவே வந்து நிற்கிறான். அவனைத் த்யானம் செய்கின்றனர்.