Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 97)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பதேந விஷ்ணோ கிமுத இதரேஷாம் விஸ்ருஜ்ய ஸங்கம் ஸமுபாஸ்தே த்வாம் கரோஷி தாந் கிம் த்வம் அபேத காமாந் காலேந பாதாவநி ஸத்யகாமாந்
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஒரு சிலர் பெரியபெருமாளின் திருவடிகளை அண்டிய பின்னர், மற்ற பலன்களை (பெரியபெருமாள் கூட வேண்டாம் என்று எண்ணி) கை விட்டு, உன்னை மட்டுமே ஆராதிக்கக்கூடும். இப்படியாக அனைத்து ஆசைகளையும் துறப்பவர்களுக்கு என்றும் நிலை பெற்றிருக்கும்படியாக உள்ள பொருள்களை (பரமபதத்தில்) அனுபவிக்கும்படியாக நீ ஏன் செய்கிறாய்?
பரமபதத்தை அடைந்தவர்களுக்கு அபஹதபாப்மா (பாவம் இல்லை), விஜர: (கிழட்டுத்தன்மை இல்லை), விம்ருத்யு: (மரணம் இல்லை), விசோகே: (சோகம் இல்லை), விஜிதத்ஸ: (பசி, தாகம் இல்லை), அபிபாஸ: (அனுபவிக்கும் பொருள் அழிவதில்லை), ஸத்யகாம: (வேண்டுவது நிறைவேறுகிறது) மற்றும் ஸத்யஸங்கல்ப: - என்ற எட்டு தன்மைகளும் வந்து சேர்கின்றன. ஆசைகளை ஒழித்து இங்கு வந்தவர்கள் ஸத்யகாமந் எனப் பெயர் பெறுவது வேடிக்கையாக உள்ளது. இப்படி நீ ஏன் செய்கிறாய்?