Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 96)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

தந்யா முகுந்தஸ்ய பத அநுஷங்காத் தநீயதா யேந ஸமர்ச்சிதா த்வம் வாஸ: ததீய: மணிபாதரஷே லக்ஷ்ம்யா அளகாமபி அதரீகரோதி

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நீ பெரியபெருமாளின் தொடர்பு கொண்ட காரணத்தினால் அனைத்துச் செல்வங்களும் பெற்றுள்ளாய். இப்படிப்பட்ட உன்னை ஆராதிக்கும் ஒருவனின் வீடானது, அனைத்து செல்வங்களையும் பெற்று, குபேரனின் பட்டணத்தையும் விட மேம்பட்டு உள்ளது.

யார் எதனை வேண்டுகிறார்களோ அதனைப் பாதுகைகள் அளித்துவிடுவதாகக் கூறுகிறார். செல்வத்தை விரும்புபவர்களுக்கு, போதுமான செல்வம் அளிக்கிறது. இதனால் அவர்களின் வீடுகள் குபேரபுரியையே தாழச்செய்யும் அளவிற்கு செல்வத்தால் உயர்கின்றன.