Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 95)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

பரஸ்ய தாம்ந: ப்ரதிபாதந அர்ஹாம் வதந்தி வித்யாம் மணிபாதுகே த்வாம் யத: தவ ஏவ அதிகமே ப்ரஜாநாம் தூரீபவதி உத்தர பூர்வம் அம்ஹ:

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! பெரியவர்கள் உன்னையே மிகவும் உயர்ந்த தேஜஸ் என்னும் பெரியபெருமாள் அனைவருக்கும் அளிக்கத் தகுதியான ஞானம் என்று (பக்தி , ப்ரபத்தி) கூறுகின்றனர். உன் மூலமாக பத்தி-ப்ரபத்திக்கு முன்பு செய்த பாவங்களும், பின்னே செய்ய உள்ள பாவங்களும் விலகி ஓடுகின்றன.

ஒருவன் பக்தி அல்லது ப்ரபத்தி செய்யும்போது அவனது பாவங்கள் அனைத்தையும் பெரியபெருமாள் நீக்கிவிடுவதாக சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ஆனால், பக்தி-ப்ரபத்தி போன்ற உபாயங்கள் அவசியமில்லை; பாதுகையைத் தலையில் ஏற்பதால் ஒருவன் பாவங்கள் அழிந்து விடுகின்றன என்றார்.