Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 94)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
ருத்ரம்: ச்ரித: தேவகண: ஸருத்ர: பத்மாஸநம் ஸ: அபி ச பத்மநாபம் ஸ த்வாம் அநந்த: ந புந: த்வம் அந்யம் க ஏஷ பாதாவநி தே ப்ரபாவ:
பாதுகையே! தேவர்களின் கூட்டம் தங்களின் பாதுகாப்புக்காக சிவனை அடைந்தது. சிவன் ப்ரம்மனை அடைந்தார், ப்ரம்மன் தாமரை மலரைத் திருநாபியில் வைத்த பெரியபெருமாளை அடைந்தார். அனைத்து இடத்திலும் எப்போதும் உள்ள பெரியபெருமாள் உன்னை அடைந்தான். நீ உனது பாதுகாப்புக்காக யாரையும் அடையவில்லை. இப்படிப்பட்டது அல்லவா உனது பெருமை?
தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் சிவன். சிவனைக் காட்டிலும் உயர்ந்தவன் ப்ரம்மன். ப்ரம்மனைக் காட்டிலும் மேன்மை பெற்றவன் பெரியபெருமாள். அந்தப் பெரியபெருமாள் அண்டுவது பாதுகை என்பதால், பாதுகைக்கு மேன்மை மிகவும் அதிகம் என்றார்.