Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 93)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
வஹந்தி யே மாதவ பாதுகே த்வாம் ஊஹ்யந்த ஏதே திவி நிர்விகாதா: ஹம்ஸேந நித்யம் சரதப்ர பாஸா கைலாஸ கௌரேண ககுத்மதா வா
மாதவனின் பாதுகையே! உன்னை யார் தங்கள் தலையில் மிகுந்த பக்தியுடன் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் எந்தவிதமான தடையும் அடைவதில்லை. ஆகாயத்தில் உள்ள சரத் கால மேகம் போன்ற நிறம் உடைய ஹம்ஸம் அல்லது கைலாயம் போன்ற வெண்மையான நிறம் கொண்ட ரிஷபம் மீது ஏறியபடி செல்கின்றனர்.
பாதுகைக்குத் தங்கள் தலையை யார் ஒருவன் வாஹனமாக அளிக்கிறானோ, அவனது நிலை கூறப்படுகிறது. ஹம்ஸம் என்பது ப்ரம்மனின் வாஹனம் ஆகும். ரிஷபம் என்பது ருத்ரனின் வாஹனம் ஆகும். ஆக, பாதுகையைத் தலையில் ஏற்றவன் ப்ரம்ம பதவியோ, ருத்ரப் பதவியோ அடைந்துவிடுகிறான் என்று கருத்து. ஹம்ஸம் ஆகாயத்தில் உள்ளதால் ஆகாயத்தையும், ரிஷபம் கைலாயத்தில் உள்ளதால் கைலாயத்தையும் ஸ்வாமி தேசிகன் கூறுகிறார்.