Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 92)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

க்ஷணம் ஸரோஜ ஈக்ஷண பாதுகே ய: க்ருதாதர: கிம்குருதே பவத்யா: அகிஞ்சநஸ்யாபி பவந்தி சீக்ரம் ப்ரூகிங்கரா: தஸ்ய புரந்தராத்யா

தாமரை போன்று அழகாக மலர்ந்த திருக்கண்களை உடைய பெரியபெருமாளின் பாதுகையே! யார் ஒருவன் மிகவும் மகிழ்வுடன் உனக்கு சிறிது நேரம் கைங்கர்யம் செய்தானோ அவன் ஒன்றுமே அறியாத மனிதனாக இருந்தாலும் - அவனது புருவ அசைவைக் கண்டு அவனுக்கு அடிமைத் தொழில் செய்பவர்களாக இந்திரன் முதலானோர் ஆகின்றனர்.

யார் இருவன் மிகவும் மகிழ்ந்து பாதுகைக்குக் கைங்கர்யம் செய்கிறானோ, அவனுக்கு இந்த்ரன் உட்பட தேவர்கள் அனைவரும் பணி புரிகின்றனர். அவனது புருவம் அசைவதைக் கண்டு, குறிப்பறிந்து நடக்கின்றனர்.