Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 91)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
அந்யேஷு பத்மா கமலாசந அத்யை: ரங்கேஷு ரங்காதிபதே: ச்ரிதேஷு பதாவநி த்வாம் அதிகம்ய ஜாதம் பதம் முராரே: அதிதைவதம் ந:
உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தவிர்த்து அவனது மற்ற உறுப்புக்களில் மஹாலக்ஷ்மி, ப்ரம்மன் போன்றோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் அடைந்து, வணங்கும் அவனது திருவடிகளோ உன்னை அடைந்தது. இதனால் நீ எங்களுக்கு ஆராதிக்க ஏற்றவளாக உள்ளாய்.
பெரியபெருமாளின் பல்வேறு அவயவங்களில் (உடல் உறுப்புகள்) மஹாலக்ஷ்மி, ப்ரம்மன், ருத்ரன் என்று பலரும் உள்ளனர். ஆயினும் அவர்களை அண்டிய அந்த அவயவங்களுக்கு எந்தப் பெருமையும் உண்டாகவில்லை. ஆனால் அவன் திருவடியானது பாதுகையை அண்டியது. அதன் விளைவு - மற்ற அவயவங்களைவிட மிகவும் உயர்வு பெற்றது. ஆக, பாதுகையை அண்டியவர்கள் தாமாகவே உயர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.