Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 90)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பாதௌ முராரே: சரணம் ப்ரஜாநாம் தயோ: தத் ஏவ அஸி பதாவநி த்வம் சரண்யதாயா: த்வம் அநந்ய ரக்ஷா ஸம்த்ருச்யஸே விச்ரம் பூமி: ஏகா
முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றும் திறன் உள்ளது பெரியபெருமாளின் திருவடிகளே ஆகும். அப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளையே காப்பாற்றுபவளாக நீ உள்ளாய். உன்னைக் காப்பாற்ற வேறு யாரும் அவசியம் இல்லை. ஆகவே “காப்பாற்றுதல்” என்ற செயல் உன்னிடம் தங்கிவிட்டது போலும்.
நம் போன்றவர்களுக்கு ரக்ஷையாக உள்ளது நம்பெருமாளின் திருவடிகளே ஆகும். ஆனால் அந்தத் திருவடிகளையே பாதுகாதேவி காக்கிறாள் என்றால், அவளைக் காப்பதற்கு யாரும் அவசியம் இல்லை என்றாகிறது அல்லவா? ஆக, பாதுகாப்பு என்பது பாதுகையிடம் அடிமையாக உள்ளது எனலாம்.