Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 89)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

பரஸ்ய பும்ஸ: பரமம் பதம் தத் பிபர்ஷி நித்யம் மணிபாதுகே த்வம் அந்யாத்ருசாம் வ்யோமஸதாம் பதாநி த்வயி ஆயதந்தே யதிதம் ந சித்ரம்

உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! மிகவும் உயர்ந்ததும், புகழை உடையதும் ஆகிய பரமபுருஷனின் திருவடிகளை எப்போதும் நீ கொண்டுள்ளாய். அப்படி உள்ள பகவானுக்கு அடங்கிய அனைத்து தேவர்களின் ஸ்தானங்களும் உன்னை அண்டியே உள்ளதில் வியப்பு என்ன உள்ளது?

நம்பெருமாளின் திருவடிகளே பாதுகையைச் சார்ந்து உள்ளபோது, நம்பெருமாளின் திருவடிகளைச் சார்ந்துள்ள தேவர்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?