Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 88)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
சேஷ: கருத்மாந் மணிபாதபீடீ த்வம் சேதி பாதாவநி விச்வமாந்யா: துல்யாதிகாரா யதி கிந்து ஸந்த: த்வாம் ஏவ நித்யம் சிரஸா வஹந்தி
பெரியபெருமாள் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே! அனைவராலும் போற்றப்படும் கருடன், ஆதிசேஷன், நம்பெருமாள் அவனது ஸிம்ஹாஸனத்தின் மீது அமரும்போது அவன் திருவடிகள் வைக்கின்ற கற்கள் இழைக்கப்பட்ட மேடை, பாதுகையான நீ - ஆகிய அனைவருக்கும் பெரியபெருமாளின் திருவடிகள் மீது சமமான உரிமை உள்ளது. இருப்பினும் பெரியவர்கள் ஏன் உன்னை மட்டும் தங்கள் தலையில் ஏற்கிறார்கள்? உனக்கு உள்ள உயர்வால் அல்லவா?
ஆதிசேஷன் மீது தனது திருவடிகளை எப்போதும் வைத்தபடி உள்ளான்; கருடனின் திருக்கரங்களின் தன்னுடைய திருவடிகளை வைத்தபடி உள்ளான்; கற்கள் பதிக்கப்பட்ட மேடையில் தனது திருவடிகளை வைத்துள்ளான். இந்த இடங்களில் திருவடிகள் உள்ளதைக் காட்டிலும் பாதுகையின் மீது திருவடிகள் உள்ளபோது, மேலும் அழகும் மேன்மையும் பெறுகின்றன. ஆகவே பாதுகைக்கு சிறப்பு அதிகம் என்றார்.