Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 87)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
தைத்யாதிபாநாம் பலிநாம் க்ரீடா: நிக்ஷேபணம் தே யதி நாப்யனந்தந் ரங்கேச பாதாவநி ரங்கதாம்ந: ஸோபாநதாம் ப்ராப்ய வஹந்தி அமீ த்வாம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! பலம் மிகுந்தவர்களான அசுரர்கள் உன்னைத் தங்கள் தலையில் வைத்துக் கொள்வதை மகிழ்வுடன் ஏற்கவில்லை என்றால் நடப்பது என்ன? அவர்களுடைய க்ரீடங்கள் ஸ்ரீரங்கவிமானத்திற்கு படிகளாக அமைந்து விடுகின்றன.
உன்னைத் தங்கள் தலைகளின் ஏற்காமல், கர்வம் கொண்ட அசுரர்கள் இருக்கக்கூடும். அவர்களை நம்பெருமாள் செய்வது என்ன? மிகுந்த வலிமை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது க்ரீடங்களை அவன் பறித்துவிடுகிறான். அந்தக் க்ரீடங்களில் உள்ள இரத்தினக் கற்களைத் தனது ஸன்னதியில் உள்ள படிகளில் பதித்துவிடுகிறான். பின்னர், அவற்றின் மீது உன்னை சாற்றிக் கொண்டு கம்பீரமாக நடந்து செல்கிறான்.