Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 85)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பூமி: ச்ருதீநாம் புவநஸ்ய தாத்ரீ குணை: அநந்தா விபுலா விபூத்யா ஸ்திரா ஸ்வயம் பாலயிதும் க்ஷமா ந: ஸர்வம் ஸஹா சௌரிபதாவநி த்வம்
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ அனைத்து வேதங்களுக்கும் இருப்பிடம் ஆவாய்; உலகம் முழுவதையும் ஆதரித்துக் காப்பாற்றுகிறாய்;தயை முதலிய பலவிதமான எல்லையற்ற குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளாய்; ஐச்வர்யம் நிரம்பப் பெற்றவளாக உள்ளாய்; உனது இயல்பாகவே நன்மையான விஷயங்களில் உறுதியாக உள்ளாய்; எங்களைக் காப்பாற்றுவதிலும், எங்கள் குற்றங்களைப் பொறுப்பதிலும் ஏற்றவளாக உள்ளாய்.
இந்தச் ச்லோகத்தில் கவிச்சிம்மத்தின் சொற்திறனை சற்று ஆராயலாம். இந்தச் ச்லோகத்தில் உள்ள பூமி, தாத்ரீ, அநந்தா, விபுலா, ஸ்திரா, க்ஷமா மற்றும் ஸர்வம்ஸஹா என்னும் பதங்கள் காண்க. இவை அனைத்தும் பூமியின் வெவ்வேறு பெயர்கள் ஆகும். இதனை மிகவும் லாவகமாகக் கையாண்டதைக் காண்க.