Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 84)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

முகுந்த பாதாம் புஜதாரிணி த்வாம் மோஹாத் அநுத்தம்ஸயதாம் ஜநாநாம் மூர்த்நி ஸ்திதா துர்லிபயோ பவந்தி ப்ரசஸ்த வர்ண அவளய: ததீயா:

க்ருஷ்ணனின் தாமரை போன்ற மென்மையாக உள்ள திருவடிகளைத் தாங்கும் பாதுகையே! உன்னைத் தங்கள் தலையில் ஏற்பதால் நிகழும் நன்மை என்ன என்று தெரியாமல் சிலர் தங்கள் தலையில் உன்னை ஏற்காமல், புறக்கணித்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களின் தலையில் உள்ள நல்ல எழுத்துக்கள் அனைத்தும் கெட்ட எழுத்துக்களாக மாறிவிடுகிறன.

அனைவரின் தலைகளில் நல்ல எழுத்துக்களும் உண்டு, தீய எழுத்துக்களும் உண்டு. நம்பெருமாள் செய்வது என்ன? பாதுகையைத் தலையில் ஏற்காதவர்களின் நல்ல எழுத்தை மட்டும் தீய எழுத்தாக மாற்றிவிடுகிறான், தீய எழுத்தை அப்படியே விட்டுவிடுகிறான்.