Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 83)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

பரஸ்யபும்ஸ: பத ஸந்நிகர்ஷே துல்ய அதிகாராம் மணிபாதுகே த்வாம் உத்தம்ஸயந்தி ஸ்வயம் உத்தமாங்கை: சேஷாஸமம் சேஷகருத்மதாத்யா:

உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! பரம்பொருளான பகவானின் திருவடிகளின் கீழே நீயும் ஆதிசேஷன், கருடன் முதலானோர்களும் ஒரே போன்றுதான் கைங்கர்யம் செய்து வருகின்றீர்கள். ஆயினும் ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள் உன்னைப் பரிவட்டம் போன்று தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர். இது உனக்குப் பெருமை அல்லவா?

பாதுகையானது நித்யஸூரிகளை ஒத்த கைங்கர்யமே எம்பெருமானுக்குச் செய்தாலும், அவர்களை விட இவளுக்கு ஏற்றம் உண்டு என்றார். இதனை, அவர்கள் தங்கள் தலையில் பாதுகையை ஏற்பதன் மூலமும் அறியலாம்.