Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 82)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

பிபர்ஷி நித்யம் மணிபாதுகே த்வம் விச்வம்பரம் தாம நிஜேந பூம்நா தவ அனுபாவ: சுளகீக்ருத: அயம் பக்தை: அஜஸ்வரம் பவதீம் ததாநை:

உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகம் முழுவதையும் தாங்கி நிற்கின்ற பெரியபெருமாளையே நீ தாங்குகிறாய். இப்படிப்பட்ட உனது உயர்ந்த பெருமை என்பது, உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்ளும் பக்தர்களின் பெருமைக்கு முன்பாக, உள்ளங்கையில் அடக்கப்படும் அளவாகி விடுகிறது.

பாதுகைகள் நம்பெருமாளைத் தாங்கி நிற்பது கடினமே, அதனால் அவளுக்குப் பெருமை அதிகம் என்று ஒப்புக் கொள்ளவேண்டும். ஆனால்,பாதுகைகளையும் தங்கள் தலைகளில் ஏற்பவர்கள், பாதுகைகள் மீது உள்ள நம்பெருமாளையும் சேர்த்துச் சுமந்து நிற்கின்றனர் என்றல்லவா ஆகிறது? அப்படிப்பட்டவர்களின் பெருமையானது பாதுகைகளின் பெருமையைக் காட்டிலும் உயர்ந்தது என்று கூறவேண்டும் அல்லவா?