Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 81)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

த்வயைவ நித்யம் மணிபாதரக்ஷே ராஜந்வதீ ஸ்ருஷ்டி: இயம் ப்ரஜாநாம் ஸ்த்ரீ ராஜ்ய தோஷ ப்ரசமாய நூநம் நிர்த்திச்யஸே நாத விசேஷணேந

உயர்ந்த கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகமானது உன் மூலம் நல்ல ஓர் ஆட்சியாளனைக் கொண்டுள்ளது. ஆனால் நீ இவ்வாறு இருந்தால் பெண் அரசாளும் ஸ்த்ரீ ராஜ்யம் என்று குற்றம் சொல்லக்கூடும். அதனால்தான் உன்னைப் பெரியபெருமாள் திருநாமத்துடன் இணைத்துக் கூறுகிறார்கள் போலும்.

பொதுவாக இந்த உலகில் ஒரு பெண்ணைக் குறிப்பிடும்போது, “இன்னாரின் பத்தினி”, என்று கூறுவதே வழக்கமாகும். இதே போன்று இங்கு பாதுகையானது, “ரங்கநாத பாதுகை” என்று பெரியபெருமாளை முன்னிட்டுக் கூறப்படுவதை உணர்த்துகிறார்.