Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 78)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

அஸ்த்ர பூஷணதயா ஏவ கேவலம் விச்வம் ஏதத் அகிலம் பிபர்த்தி ய: அகிலம் ஏந மணிபாதுகே த்வயா ஸ: அபி சேகரதயா ஏவ தார்யதே

உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பெற்ற பாதுகையே! பெரியபெருமாள் செய்வது என்ன? இந்த உலகங்கள் முழுமையையும் தனது ஆயுதம் போன்றும், ஆபரணம் போன்றும் எந்தவிதமான சிரமமும் இன்றி தரிக்கின்றான். அப்படிப்பட்ட பெரியபெருமாளை நீயும் அதே போன்று, உனது தலையில் எந்தவிதமான சிரமமும் இன்றி, மலர் போன்று வைத்துக் கொள்கிறாய்.

அனைத்து உலகங்களையும் பெரியபெருமாள் சிரமம் இன்றித் தாங்குகிறான். அப்படிப்பட்ட அவனை, நீ எந்த சிரமும் இன்றித் தாங்குகிறாய். இதன் மூலம் பாதுகைகள், உலகையும் சேர்த்துத் தாங்குகின்றன என்று கருத்து. பெரியபெருமாளை அண்டி இந்த உலகம் இருப்பது போன்று, அவன் பாதுகைகளை அண்டி இருக்கிறான் என்றும் கூறலாம்.