Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 77)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
தவ கேசவ பாதுகே ப்ரபாவ: மம துஷ்கர்ம ச நநு அநந்தஸாரே நியமேந ததாபி பச்சிமஸ்ய ப்ரதமேந ஏவ பராபவம் ப்ரதீம:
அழகான கேசம் கொண்ட க்ருஷ்ணனின் பாதுகையே! உனது பெருமைகள் மற்றும் நான் செய்யும் பாவங்கள் ஆகிய இரண்டிற்கும் எல்லை காண இயலாது. ஆயினும் முதலாவதாகக் கூறப்பட்ட உனது பெருமைகளின் மூலம், இரண்டாவதாகக் கூறப்பட்ட எனது பாவங்களுக்கு தோல்வி நிச்சயம் என்று கருதுகிறேன்.
பாதுகையால் முதலில் பாவங்கள் கழிந்து விடுகின்றன. அதன் பின்னர் மோக்ஷம் உறுதியாகிறது. பாதுகைகள் ஆசார்யனாகவே கருதப்படுவதால், ஆசார்யனால் நமது பாவங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அவராலேயே மோக்ஷ மார்க்கம் ஸித்திக்கிறது என்று கருத்து.