Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 76)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
ப்ரணமந்தி ந வா விதே: விபாகாத் ய இமே ரங்கநரேந்த்ர பாதுகே த்வாம் உபஜாதம் அநுத்தமாங்கம் ஏஷாம் உபயேஷாம் அபி சித்ரம் உத்தமாங்கம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்கள் கர்மபலன் காரணமாக உன்னைப் பலர் வணங்குகின்றனர், பலர் வணங்காமல் உள்ளனர். வணங்கியவர்களின் தலைகள் உயர்ந்தும், வணங்காதவர்களின் தாழ்ந்தும் போகின்றன. இது என்ன ஒரு வியப்பான செயல்!
இங்கு அநுத்தமாங்கம் என்பது இரு பொருள்படும் - உயர்ந்த உடல் உறுப்பு, தாழ்ந்த உடல் உறுப்பு - என்பதாகும். இதன் கருத்து என்ன? தலையானது உடலிலேயே மிகவும் உயர்ந்த உறுப்பாகும். ஆனால், அது தன்னைத் தாழ்த்திக் கொள்ளவில்லை என்றால், தாழ்ந்த மற்ற உறுப்புக்களைவிட தாழ்ந்துவிடும். எம்பெருமானின் திருவடி நிலைகளை (சடாரி) ஏற்கும்போது தலை சற்றே சாய்ந்தாலும், அது தற்காலிகமானதே; சடாரி பெற்ற பின்னர் மற்றவர்களைவிட உயர்ந்த நிலை உண்டாகிவிடும். ஆனால், அப்போது தலை வணங்கவில்லை என்றால், அதன் பின்னர் குனிந்த தலை நிமிர இயலாமல் போகும்.