Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 75)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
அபஹாய ஸிதாஸிதாந் உபாயாந் அரவிந்த ஈக்ஷண பாதுகே மஹாந்த: த்வத் அநந்யதயா பஜந்தி வ்ருத்திம் த்வத் அஸாதாரண போக ஸாபிலாஷா:
தாமரை போன்று அழகாகவும் சிவந்தும் உள்ள கண்களைக் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே! கர்மயோகம் போன்ற உபாயங்கள், மோக்ஷம் முதலான பலன்களை அளிக்கவல்லதா என்ற ஐயம் உள்ளது. இதனால் பெரியவர்கள் இவற்றைக் கைவிடுகின்றனர். உனக்கு மட்டுமே அடிமையாக உள்ள சுகம் அனுபவித்து, உனது கைங்கர்யத்தில் மட்டுமே ஆசை கொண்டு, வேறு யாரையும் நினைக்காமல் உள்ள வைராக்யம் பெறுகின்றனர்.
எம்பெருமானை அடைய ஆசார்யனே வழி என்பதை இங்கே கூறுகிறார். பாதுகைகள் ஆசார்யனையே குறிக்கும் என்பதால், பாதுகையை அண்டி, அதற்குக் கைங்கர்யம் செய்யும்போது, மோக்ஷ உபாயம் தானே ஸித்திக்கிறது என்று கருத்து.