Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 74)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

அபிகம்ய முகுந்த பாதுகே த்வாம் அபநீத ஆதபவாரணை: சிரோபி: ஹரிதாம் பதய: துராபம் அந்யை: அநக சாயம் அவாப்நுவந்தி போகம்

முகுந்தனாகிய க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னைத் தனது திருவடிகளில் அணிந்தபடி திருவரங்கன் சஞ்சாரம் செய்யும்போது, அவன் பின்னே, தங்களது வெண்கொற்றக்குடைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய இந்த்ரன் முதலானவர்கள் வருகின்றனர். ஆனால் அவர்களுக்குக் கிட்டுவது என்ன? மற்றவர்களால் எளிதில் அடைய இயலாததும், தோஷங்கள் ஏதும் இல்லாததும், ஒளியை உடையதும் ஆகிய உனது நிழலை அடைந்து, சுகம் பெறுகின்றனர்.

நம்பெருமாள் திருவீதி சஞ்சாரம் செய்யும்போது, அவன் பின்னே வெயில், மழை என்று குடைகள் பிடித்தபடி செல்வது, க்ரீடம் முதலானவை அணிந்து செல்வது ஆகியவை கூடாது. அவ்விதம் சென்றால் மட்டுமே பாதுகைகளின் நிழலில் நம்மால் ஒதுங்க இயலும்.