Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 73)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

பதரக்ஷிணி வத்ஸலா நிகாமம் ரகுவீரஸ்ய பத அம்புஜாதபி த்வம் யத் அஸௌ பரத: த்வயா அம்சவத்வாந் ந புந: தாத்ருசம் நாந்வபூத் வியோகம்

பெரியபொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தாமரை போன்று உள்ள இராமனின் மென்மையான திருவடிகளைவிட உனக்கு மக்கள் மீது ப்ரியம் அதிகம் போலும். அதனால்தான் பரதன் உன்னை ஏற்று வந்த பின்னர், இராமனைப் பிரிந்த துன்பத்திலும், நீ அருகில் உள்ளதால், அந்தத் துன்பத்தை மறந்தான் போலும்.

திருவடிகளைக் காட்டிலும் வாத்ஸல்யம் அதிகமாக உள்ளது பாதுகையிடமே என்றார். பரதன் இராமனை எத்தனையோ கெஞ்சியபோதிலும், இராமனும் அவனது திருவடிகளும் இரக்கம் கொள்ளவில்லை. ஆனால், பரதன் அழைத்தவுடன் பாதுகைகள் அல்லவோ ஓடி வந்தன? அயோத்தி மக்கள் மீதும், பரதன் மீதும் பாதுகைக்கு இருந்த வாத்ஸல்யம் காரணமாக அல்லவா பாதுகைகள் அயோத்தி திரும்பின? பாதுகைகளுக்குத் திருவடிகள் மீது பற்று அதிகமே; இருப்பினும் நாட்டு மக்கள் மீது பாதுகைகளுக்கு மேலும் பற்று அதிகம் எனலாம்.