Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 72)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

ஜகதாம் அபிரக்ஷேண த்ரயாணாம் அதிகாரம் மணிபாதுகே வஹந்த்யோ: யுவயோ: பரிகர்ம கோடி லக்நம் சரணத்வந்தம் அவைமி ரங்கபர்த்து:

உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! மூன்று உலகங்களையும் காப்பாற்றுபவள் என்ற பெருமை உடையவளாக நீ உள்ளாய். நீ நம்பெருமாளின் இரண்டு திருவடிகளையும் ஆபரணம் போன்று உனது தலையில் சூட்டியுள்ளாய் போலும்.

இங்கு யுவயோ: என்று பன்மையில் கூறுவது காண்க. இதன் காரணம் இரண்டு பாதுகைகளையும் கூறுகிறார். ஒரு நாட்டு அரசனுக்கு அவனது மணிமகுடம் பாரமாக இருக்குமா? அது போன்று, மூன்று உலகங்களுக்கும் அரசி போன்று உள்ள பாதுகைக்கு, பெரியபெருமாளின் திருவடிகள் பாரம் அல்லவே.