Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 70)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பரதாச்வஸநேஷு பாதசப்தம் வஸுதா ச்ரோத்ர ஸமுத்பவ: முநீந்த்ர: படதி த்வயி பாதுகே தத: த்வம் நியதம் ராமபதாத் அபிந்ந பூமா
பாதுகையே! புற்றில் இருந்து தோன்றிய வால்மீகி மஹரிஷி, இராமாயணத்தில் பரதன் மக்களைச் சமாதானப்படுத்தக் கூறிய சொற்களில், உன்னைப் பற்றிக் கூறும்போது திருவடி என்ற பதத்தையே பயன்படுத்துகிறார். இதன் மூலம் உனக்கும் இராமனின் திருவடிகளுக்கும் உள்ள பெருமைகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று புரிகிறது.
பரதன் மக்களிடம், “இந்தப் பாதுகைகளை இராமனின் திருவடிகளாகவே எண்ணவேண்டும்”, என்றான். இதன் மூலம் பாதுகைக்கு இராமனின் திருவடிகளுக்குச் சமமான பெருமை உள்ளது என்று அறியலாம்.