Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 69)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

த்விதயம் ப்ரதியந்தி ரங்கபர்த்து: கதிசித் காஞ்சந பாதுகே சரண்யம் அபயாந்விதம் அக்ரிமம் கரம் வா பவதீ சேகரிதம் பதாம்புஜம் வா

தங்கத்தால் இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகில் உள்ள புண்ணியம் நிறைந்தவர்கள் செய்வது என்ன? அபய முத்திரை காணபிக்கும் நம்பெருமாளின் திருக்கரம், உன்னால் அலங்காரம் செய்யப்பட்ட அவனது தாமரை போன்ற திருவடிகள் - இந்த இரண்டையும் எப்போதும் வணங்கியபடி உள்ளனர். இதனால் தங்கள் கவலைகளை மறந்து அவர்கள் உள்ளனர்.

நம்பெருமாளின் வலது திருக்கரமானது “அஞ்சேல்” என்று அபயஹஸ்தத்துடன் உள்ளது. அவனது திருவடிகளோ, அதனை அடைந்தவர்களை நழுவவிடாமல் உள்ளது. இந்த இரண்டையும் பற்றுபவர்கள், எதனைக் குறித்தும் கவலை கொள்வதில்லை.