Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 68)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
மதுவைரி பரிக்ரஹேஷு நித்யம் க்ஷமயா த்வம் மணி பாதுகே ஸமேதா தத் அபி க்ஷமஸே ந கிம் பரேஷாம் த்ரிதஸாதீஸ்வர சேகரே நிவேசம்
மது என்ற அசுரனை அழித்த பெரியபெருமாளின் பாதுகையே! அப்படிப்பட்ட பெரியபெருமாள் உபயோகப்படுத்தும் அனைத்து விதமான பொருள்களிலும் நீயே மிகவும் பொறுமை உடையவளாக உள்ளாய். இவ்வாறு இருந்தாலும், தேவர்கள் தங்கள் தலையில் உன்னைத் தவிர வேறு எதனை ஏற்றுக்கொண்டாலும் நீ ஏன் பொறுத்துக் கொள்ள மறுக்கிறாய்?
பாதுகையைத் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொண்ட தேவர்கள், தங்கள் தலையில் க்ரீடம், வெண்குடை போன்றவற்றை ஏற்க மாட்டனர். இதன் காரணம், பாதுகை அந்தச் செயலைப் பொறுக்காது என்பதால் ஆகும்.