Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 67)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
இஹ யே பவதீம் பஜந்தி பக்த்யா க்ருதிந: கேசவ பாதுகே நியுக்தா: கத்யாம்ப திரோஹிதம் த்ருதீயம் நயநம் த்ரீணி முகாநி வா கிம் ஏஷாம்
அழகான சுருண்ட தலைமுடி உடைய க்ருஷ்ணனின் பாதுகையே! இந்த உலகில் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள், உன்னைப் பக்தியுடன் வணங்கியபடி உள்ளனர். இவர்களுடைய மூன்றாவது கண், மற்ற மூன்று முகங்கள் மறைந்து உள்ளதோ?
பாதுகையை ஆராதிப்பவர்களுக்கு சிவன் என்ற பதவி, ப்ரம்மன் என்ற பதவி தேடி வரும். மூன்று கண்கள் என்பது சிவனையும், நான்கு முகங்கள் என்பது ப்ரம்மனையும் குறிக்கும். மூன்றாவது கண் என்றும், வெளியில் தெரிவது தவிர மூன்று தலைகள் என்பதும் இப்பதவிகளைக் குறிக்கும். அந்தப் பதவிகளை அடைய எந்த அளவு உயர்ந்திருக்க வேண்டுமோ, அதே அளவு உயர்ந்தால் மட்டுமே பாதுகை மீது பக்தி உண்டாகும் என்று கருத்து.