Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 66)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
சரணாகத ஸார்த்த வாஹ சீலாம் ச்ருதி ஸீமந்த பத ப்ரஸாதந அர்ஹம் அதிரங்கம் உபாஸ்மஹே முராரே: மஹநீயாம் தபநீய பாதுகே த்வாம்
முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! வேதங்களுக்கு அலங்காரமாக உள்ள வேதாந்தங்களால் பூஜிக்கத் தகுந்தபடி நீ உள்ளாய். நீ செய்வது என்ன? உன்னை அண்டும் அனைவரையும், பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று, அவர்களுக்குச் சரணாகதி ஏற்படும்படிச் செய்கிறாய். இப்படிப்பட்ட உன்னை ஸ்ரீரங்க விமானத்தில் நாங்கள் காண்கிறோம்.
தன்னிடம் வந்தவர்களை அன்புடன் பெரியபெருமாளிடம் அழைத்துச் சென்று, அவனுடைய ஸம்பந்தம் என்றும் இருக்கும்படிச் செய்துவிடுகிறாள். ஆக, பாதுகை எப்போதும் பெரியபெருமாளின் ஸன்னதியிலேயே உள்ளாள்.