Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 65)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
த்ருவம் இந்த்ரிய நாக ச்ருங்கலா வா நிரய த்வார நிவாரண அர்க்களா வா அநபாய பத ஆதிரோஹிணீ வா மம ரங்கேச விஹார பாதுகே த்வம்
ஸ்ரீரங்கநாதனின் லீலைகள் அனைத்திலும் பங்கு பெறும் பாதுகையே! எனது இந்த்ரியங்கள் யானை போன்ற வலுவுடன் என்னை இழுக்கும்போது, அவற்றை அடக்கும் சங்கிலி போன்று நீ உள்ளாய். நான் நரகத்தின் வாசல் நோக்கிச் செல்லாதவண்ணம், அந்த நரகத்தின் வாசல் கதவின் தாழ்ப்பாளாக நீ உள்ளாய். மேலும், அழிவே இல்லாத ஸ்ரீவைகுண்டத்திற்கு நான் சுலபமாக ஏறிச் செல்ல உதவும் ஏணியாகவும் நீ உள்ளாய்.
நரகம் செல்வதற்கு, பாவங்கள் பல செய்வதே காரணமாஇ விடுகிறது. இந்தப் பாவங்களுக்கான காரணம் இந்த்ரியங்களை அதன் போக்கில் திரியவிடுவதே ஆகும். ஆக, முதலில் பாதுகைகள் நம்முடைய இந்த்ரியங்களை அடக்குகின்றன. இதன் மூலம் பாவம் செய்வது தடுக்கப்படுகிறது. இதனையும் மீறி ஏதோ சில காரணங்களால் நரகம் செய்ய நேரிட்டாலும், பாதுகைகள் நரகத்தின் வாயிலில் நின்று, நம்மைத் தடுத்து விடுகின்றன. இப்படியாக நாம் ஸ்ரீவைகுண்டம் செல்ல எளிய ஏணியாக பாதுகைகள் உள்ளன.