Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 64)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

அதிதைவதம் ஆபதத்ஸு கல்பேஷு அதிகாரம் பஜதாம் பிதாமஹாநாம் அபிரக்ஷது ரங்கபர்த்து: ஏஷா கருணா காசந பாதுகாமயீ

இனி வரப்போகும் கல்பங்கள் அனைத்திலும் ப்ரம்ம பட்டத்தை அடையப்போகும் அனைவராலும் ஆராதிக்கத் தகுந்தது; ஸ்ரீரங்கநாதனின் எல்லை காண இயலாத கருணை என்பதே உருவமாக உள்ளது - இப்படிப்பட்டது எது என்றால், ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே ஆகும். அந்தப் பாதுகைகள் நம்மைக் காக்கட்டும்.

ப்ரம்ம பட்டம் என்பது பாதுகைகளைத் தங்கள் தலையில் ஏற்றவர்களுக்கு மிகவும் எளிதாக, தானாகவே கிட்டக்கூடியது ஆகும். இங்கு நம்பெருமாளின் கருணை என்பதே பாதுகை என்னும் வடிவு எடுத்ததோ என்று வியந்து கூறுகிறார்.