Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 63)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
விகாஹந்தே ரங்கக்ஷிதிபதி பதத்ராயிணி ஸக்ருத் வஹந்த: த்வாம் அந்தர் விநிஹத குசேல வ்யதிகரா: மது உத்தாம் ஸ்தம்பேரம் கரட நிர்யத் மதுஜரீ பரீவாஹ ப்ரேங்கத் ப்ரமர முகாராம் அங்கணபுவம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! குசேலரை மனதில் நினைத்தபடி உன்னைத் தங்கள் தலையில் வைத்துக்கொண்டால் போதுமானது. அவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது அங்கு கொழுப்பினால் பருத்த யானைகள் கட்டப்பட்டுள்ளதையும், அவற்றின் மத ஜலங்களில் வண்டுகள் ரீங்காரம் செய்தபடி உள்ளதைக் காண்பார்கள் (யானை வீட்டில் உள்ளது என்றால் ஐஸ்வர்யம் நிறைந்துள்ளது என்று பொருள்).
உன்னைத் தலைகளில் ஏற்பவர்கள் பெறுவது என்ன? க்ருஷ்ணனிடம்தான் ஏதேனும் பெற்றோமா இல்லையா என்று அறியாமல் குசேலர் இருந்தார். இப்படியாகத் தாங்கள் பெற்றது என்ன என்று அறியாதபடி அவர்களுக்கு அதிக ஐச்வர்யம் அளித்து விடுகிறாய். அவர்கள் வீடு திரும்பும் போது மதயானைகள் கட்டப்பட்டுள்ளதைக் காண்கின்றனர் (ஐச்வர்யம் வந்தது என்று பொருள்).