Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 62)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
ஸமுத்கக்ஷிபதி சேதஸி ஸ்திர நிவேசிதா தாவகீ முகுந்த மணிபாதுகே முஹு: உபாஸநா வாஸநா உதர்க்க பரிகர்க்கசாந் உபரிபர்வணா கர்விதாந் அநர்த்த சத கர்ப்பிதாந் அமரசம்பளீ விப்ரமாந்
முகுந்தனாகிய க்ருஷ்ணனின் மணிகள் பதிக்கப்பெற்ற பாதுகையே! மனதில் எப்போது நிலையாக நீ இருக்கும்படியாக த்யானிக்கவேண்டும். இதன் பலன் என்ன? பொறுக்க முடியாத துன்பம் ஏற்படுத்தக் கூடியதும், தாழ்மையாகக் கருதப்படுவதும், பல உபத்திரவங்களை உடையதும் ஆகிய தேவலோகப் பெண்களுடன் விளையாடுதல் போன்றவை கூட வெறுக்கும் பக்குவம் உண்டாகிவிடும் . உன்னைப் பற்றிய த்யானம், அவற்றை மறக்கும்படிச் செய்து விடுகிறது.
பாதுகைகளைத் தொடர்ந்து த்யானிக்கும்போது, மனதி கெட்ட எண்ணங்கள் உதிப்பதில்லை. கெட்ட எண்ணங்கள் ஏற்படாமல் உள்ளபோது, தீயசகவாசம் உண்டாவதில்லை. தீய நட்பு ஏற்படாதபோது, பகவத் சிந்தனை அதிகரிக்கிறது.