Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 59)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

ச்ருதிசத சிர: சூடா அபீடே நிபீடயிதும் க்ஷமே துரித ஸரிதாம் ஓகாந் ஏதாந் அமோக விஸர்ப்பிண: க்ரம பரிணமத் வேத: ச்ரேணீ சிகா மணி கட்டநா மஸ்ருணித தலே ரங்கக்ஷோணீ ப்ருத: மணிபாதுகே

வேதங்களின் தலைகளில் உள்ள உபநிஷத்துக்கள், வேதங்களுக்கு ஆபரணமாக உள்ளன. இப்படிப்பட்ட உபநிஷத்துக்களின் தலைகளுக்கு பெரியபெருமாள் ஆபரணமாக உள்ளான். இவன் பாதுகைகளின் தலைகளுக்கு ஆபரணம் போன்று உள்ளான். உயர்ந்த கற்கள் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள், தங்கள் மீது அடிக்கடி சிரம் தாழ்த்தி வணங்கும் தேவர்களின் தலையில் உள்ள இரத்தினக்கற்கள் கொண்டு வழவழப்பாக உள்ளன. வெள்ளம் போன்று வேகமாகப் பரவியபடி உள்ள எனது பாவங்கள் என்ற வெள்ளத்தைத் தடுக்க, இந்தப் பாதுகைகள் மட்டுமே உதவும்.

நம்பெருமாளின் பாதுகைகளின் தேவர்கள் எப்போதும் தலையைத் தாழ்த்தி வணங்கியபடி உள்ளநர். இதனால் அவர்களின் க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்கள், பாதுகைகளின் உள்ள மிக உயர்ந்த கற்களில் உராய்கின்றன. இதனால் பட்டை தீட்டப்பட்டது போன்று பாதுகையில் உள்ள கற்கள் மேலும் வழுவழுப்பாகின்றன. அந்தப் பாதுகைகள் எனது பாவம் என்னும் வெள்ளம் பாய்ந்து வராமல், தங்களிடம் உள்ள அந்தக் கற்கள் மூலமாகத் தடுக்கின்றன.