Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 58)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பரிகலயஸி சேத் மாம் பத்மவாஸா நிஷேவ்யே பதகமலயுகே த்வம் பாதுகே ரங்கபர்த்து: அவிதித நிகமாநாம் நூநம் அஸ்மாத்ருசாநாம் அகடித கடநீ தே சக்தி ஆவிஷ்க்ருதா ஸ்யாத்
பாதுகையே! மஹாலக்ஷ்மியால் எப்போதும் வணங்கியபடியும் வருடப்பட்டும் இருக்கும் பெரியபெருமாளின் தாமரை போன்ற திருவடிகளில் நீ என்னைச் சேர்க்க வேண்டும். ஏன்? வேதம் போன்றவற்றை அறியாத என் போன்றவர்கள் அடைய இயலாதபடி உள்ள இடம் பகவானின் திருவடியாகும். அதனை நீ அடைய வைக்கிறாய். இந்த உலகில் ஒருவரால் அடைய இயலாத ஒரு பொருளை அடைய வைப்பதற்குத் திறமை வேண்டும் அல்லவா?
ஸ்ரீரங்கநாச்சியார் மட்டுமே மிகவும் உரிமையுடன், எளிதாகப் பற்றும் இடமாக நம்பெருமாளின் திருவடிகள் உள்ளன. அந்தத் திருவடிகளை நம்மைப் போன்ற, பலவிதங்களிலும் தாழ்ந்தவர்கள் சிந்திப்பது என்பதே இயலாத செயலாகும். அப்படி உள்ளபோது அதனை நாம் அடையும்படி ஒருவர் செய்கிறார் என்றால், அவர் எத்தனை திறமையும் வல்லமையும் உடையவராக இருக்கவேண்டும் என்று ஸ்வாமி தேசிகன் வியந்து கூறுகிறார்.