Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 56)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பரிசித பத பத்மாம் பாதுகே ரங்கிண: த்வம் த்ரிபுவந மஹநீயாம் ஸாதரம் தாரயந்த: நிஜசிரஸி நிலீநம் தேவி மந்தாரமால்யம் நிகமபரிமளை: தே வாஸயந்தீவ தேவா:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து வேதங்களாலும் போற்றப்படும் திருவடிகளில் நீ உள்ளாய். மூன்று உலகங்களும் உன்னைக் கொண்டாடிப் போற்றுகின்றன. இதனைக் கண்ட தேவதைகள் தங்கள் தலையில் அணிந்துள்ள மலர் மாலைகளைக் காட்டிலும் அதிக மணம் உள்ள உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக்கொள்கின்றனர்.
வேதங்கள் நம்பெருமாளை - ஸர்வகந்த: - என்று போற்றுகின்றன. ஆக அனைத்து நறுமணங்களுக்கும் இருப்பிடமாக அவன் உள்ளான். அவனது நறுமணங்கள் அவனது திருவடிகளில் எப்போதும் உள்ள உனக்கும் வந்துவிடுகிறது. இதன் மூலம் அவனைப் போன்றே நீ நறுமணம் வீசுவதால், தங்கள் தலையில் உள்ள மலர்களை விட நீ உயர்ந்தவள் என்று உணர்ந்து, உன்னை தேவதைகள் தங்கள் தலையில் ஏற்றுக்கொள்கின்றனர்.