Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 54)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
ஸக்ருதபி புவநே அஸ்மிந் சார்ங்கிண: பாதுகே த்வாம் உபநிஷத் அநுகல்பை: உத்தமாங்கை: ததாநா: நரகம் இவ மஹாந்த: நாகம் உல்லங்கயந்த: பரிஷதி நிவிசந்தே ப்ராக்தநாநாம் குரூணாம்
சார்ங்கம் என்ற வில்லை ஏந்திய இராமனின் பாதுகையே! உபநிஷத்துக்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ள உன்னை, இந்த உலகில் உள்ள ஒரு சிலர் தங்கள் தலையில் ஏற்றுக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் நரகத்தை கடப்பது போன்று மிகவும் எளிதாக ஸ்வர்கத்தையும் கடந்து, தங்களது ஆசான்கள் உள்ள மோக்ஷ சபையை அடைந்து விடுகின்றனர்.