Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 53)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

சிரஸி விநிஹிதாயாம் பக்திநம்ரே பவத்யாம் ஸபதி தநுப்ருத: தாம் உந்நதிம் ப்ராப்நுவந்தி மதுரிபு பதரக்ஷே யத்வசேநைவ தேஷாம் அநிதரஸுலபம் தத் தாம ஹஸ்தாபசேயம்

மது என்ற அசுரனை அழித்த நம்பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! பக்தியால் வணங்கி, உன்னைத் தங்கள் தலையில் ஏற்றுக் கொள்பவர்கள் மிகவும் உயர்ந்த மேன்மையை அடைகின்றனர். இத்தகைய மேன்மை எது? உனது தொடர்பு அற்றவர்கள் அடைய இயலாததாக உள்ளதும், பரமபதம் என்ற உயர்ந்த இடத்திலிருந்து இங்கு வந்ததும், நம்பெருமாள் என்று போற்றப்படுவதும் ஆகிய உயர்ந்த ஜோதியை அவர்கள் தங்கள் கைகளால் எட்டிப் பிடிக்கின்றனர்.

நமது கைகளில் எளிதில் சிக்காமல் உள்ள நம்பெருமாள், அவனது சடாரியை நமது தலையில் தரித்துக் கொண்டால் நமக்கு வசப்படுவான் என்று கருத்து.