Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 52)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

தடபுவி யமுநாயா: தஸ்துஷீ யத் நிவேசாத் வஹதி நிகமசாகா வைபவம் நீபசாகா பதகமலம் இதம் தத் பாதுகே ரங்கபர்த்து: த்வயி பஜதி விபூதிம் பச்ய சாகநுசாகாம்

பாதுகையே! யமுனையின் கரைகளில் உள்ள கடம்ப மரங்கள் அனைத்திலும் க்ருஷ்ணனின் அழகான திருவடிகள் பதிந்தன. இதனால் அந்த மரங்கள் அனைத்தும் வேதங்களுக்கு ஒப்பான பெருமையைப் பெற்றன. பல சாகைகள் உடைய வேதங்கள் போன்று பல கிளைகளுடன் இந்த மரங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் தாமரை மலர் போன்ற சிறிய அழகிய திருவடிகள் உன்னுடன் உள்ளதால் மேலும் பெருமை அடைகின்றன.

கண்ணனின் திருவடிகள் பட்டவுடன் மரங்களும் வேத அந்தஸ்து பெற்று விடுகின்றன. அதன் கிளைகள் வேதங்களின் சாகைகள் போன்றதாகின்றன. அப்படிப்பட்ட திருவடிகள், பாதுகை தங்கள் மீது பட்டவுடன் மேலும் பெருமை அடைகின்றன. திருவடிகளுக்கு இந்த வல்லமை உண்டானது பாதுகையால்தானோ?